இலங்கை செய்தி

மலேசிய விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியினர் – உறவினர் பராமரிப்பில் இருக்கும் சிறுமி

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் 3 வயது மகள் வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணிபுரிந்து வந்த தம்பதியர் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.

அப்போது அவர்களது 3 வயது மகளும் அங்கு இருந்துள்ளனர். விபத்தில் சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டாலும் பெற்றோரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

33 வயதான ஷியாமலா ரங்கனி குணதிலக்க மற்றும் 35 வயதான ஷஷிக ரங்கொட ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் 03 வயது மகள் பெற்றோரின் பாசத்தை இழந்தனர்.

உயிரிழந்த பெண் காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரது கணவர் காலி அங்குலுகஹா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூருக்கு இன்ஜினியராக வேலை கிடைத்து அங்கு சென்றுள்ளனர்.

விபத்துக்குள்ளான 03 வயது சிறுமி தற்போது கோலாலம்பூரில் உள்ள வைத்தியசாலையில் உறவினர் ஒருவரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக உயிரிழந்த தம்பதியினரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை