ஜேர்மனியில் Gen Z தலைமுறையினரின் வெறியாட்டம் – 17 கடைகள் சேதம்
பிராங்பர்ட்டில் ஒரே இரவில் கடைகளைச் சேதப்படுத்தி, 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காயப்படுத்திய கொள்ளையர்கள் மற்றும் கலவரக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என ஜெர்மானிய அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“Gen Z regelt” என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள போராட்டம் வன்முறையா வெடித்துள்ள நிலையில் பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
நிதி மையமான பிராங்பேர்ட்டில், முகமூடி அணிந்த கலவரக்காரர்கள் 17 கடைகளைச் சேதப்படுத்தியுள்ளனர்; அவற்றில் 5 கடைகள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த 1,300 காவல் துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர் என்றும், மோதல்களின் போது 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 13 -29 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மன் குடிமக்கள் என்றும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் “அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இச்செயலுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” எனஉள்துறை அமைச்சர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.





