வட அமெரிக்கா

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் வெற்றி கொண்டாட நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி

தெற்கு அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியில் உள்ள ஹோம்ஸ் கவுண்டியில் சனிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஷெரிப் கூறினார்

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்