பொழுதுபோக்கு

அதிரடி காட்டிய நம்ம ஜோ மற்றும் மாதவன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியில் மார்ச் 8ந் தேதி வெளியான திரைப்படம் ஷைத்தான். இப்படத்தில், அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வந்த இவர், 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியில் ஷைத்தான் என்ற படத்தில் நடித்துள்ளார் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பிளாக் மேஜிக் ஹாரர் பாணியில் உருவான இப்படத்தில் ஜோதிகா அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். குஜராத்தி மொழியில் உருவான வாஷ் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த சைத்தான் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படம் முதல் நாளிலேயே 5.05 கோடியை வசூலித்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்து, 11 நாட்களில் ரூ145 கோடியாக இருந்தது. இதையடுத்து ஷைத்தான் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் ரூ .200 கோடி ரூபாய்யைத் தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.201.73 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content