ஐரோப்பா

குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வலியுறுத்து!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது மக்களை மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருப்பது முக்கியம் என வலியுறத்தியுள்ள அவர்,  ஒரு தேசமாக வாழ்வதற்கு இது முக்கியம் எனக் கூறியுள்ளார்.

ஒரே ஒரு குழந்தை இருந்தால், எங்கள் மக்கள் தொகை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில், ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இந்த போரில் ஏராளமான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் புட்டினின் கருந்து வந்துள்ளது.  கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவின் மக்கள் தொகை 146.4 மில்லியனாக இருந்தது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்