உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா : 400 ட்ரோன்கள் களத்தில்!
ரஷ்யா, உக்ரைன் மீது 400-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன், கருங்கடலில் உள்ள துவாப்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரஷ்யா எதிர் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒடேசா மீதான தாக்குதலில் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மே 09 ஆம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி நிராகரித்துள்ளதை தொடர்நது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் போர் நிறுத்த முன்மொழிவை ‘சூழ்ச்சியானது’ மற்றும் ‘ஒரு நாடகத்தனமான செயல்பாடு’ என்று நிராகரித்து, நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





