அமெரிக்கா அச்சுறுத்தலை கைவிட்டால் மாத்திரமே பேச்சு வார்த்தை சாத்தியம் – ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளதென வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் தனது “அச்சுறுத்தும் சொல்லாடல்கள்” மற்றும் “விரிவாக்க அணுகுமுறையை” கைவிட்டால், இருதரப்பு உரையாடலுக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பல பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் போது இந்த கருத்தை அராக்சி வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைக்கு ஈரான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது தாக்குதலுக்கும் எதிராக நாட்டை பாதுகாக்க ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




