உலகம் செய்தி

ஈரானுக்கு கட்டணம் செலுத்தினால் பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், ஈரானுக்கு எவ்விதக் கட்டணத்தையும் செலுத்தக்கூடாது என அமெரிக்கக் திறைசேரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பான கடல் வழி பயணத்திற்காக ஈரானிய அமைப்புகளுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ நிதி உதவி வழங்குவது விதிமீறலாகவே கருதப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பணப்பரிமாற்றங்கள் டிஜிட்டல் நாணயம் அல்லது நேரடிப் பணம் என எந்த வடிவில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரான் கோரும் சட்டவிரோதக் கொடுப்பனவுகளைத் தவிர்ப்பதன் மூலம் சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் பெரும் சட்ட சிக்கல்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும் என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடல்வழிப் போக்குவரத்தில் ஈரானின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், அதன் வருமான ஆதாரங்களைத் தடுக்கவும் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி