ஐரோப்பா

ரஷ்ய நிழல் கடற்படையின் 41 கப்பல்களுக்கு தடை விதிப்பு!

ரஷ்யாவின் நிழல் கடற்படையின் 41 கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.

இதன் மூலம் தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.

கப்பல்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான பரந்த அளவிலான சேவைகளை இனி பெற முடியாது என்றும் ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 19 தடைகளை விதித்துள்ளது.  ஆனால் மொஸ்கோ தடைகளுக்கு ஏற்ப தனது திட்டத்தை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்