செய்தி விளையாட்டு

சாதனை படைத்த 19 வயது ஆஸ்திரேலிய வீரர்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.

இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன உஸ்மான் கவாஜா, அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக 19 வயதே ஆன அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ், நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பும்ராவின் பந்துவீச்சை எளிதாக அடித்தார். அவரது பந்துவீச்சில் 2 சிக்சர்கள் விளாசிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி