இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆபத்தா? வெளியான உண்மை தகவல்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையையும் சாடிப் பேசினார்.

அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன், அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேய‍ே பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சனில் வட்டகல மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளதுடன், இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை