RCB, குஜராத் அணிகள் இன்று மோதல்!
IPL 2026 தொடரில் இன்று நடைபெறவுள்ள 34ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru , Gujarat Titans ஆகிய அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், சென்னை ஆகிய அணிகளை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது.
அதன் பிறகு மும்பை, லக்னோவை ஆகிய அணிகளை மண்டியிட வைத்தது. எனினும், முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் பணிந்தது.
குஜராத் அணி முதல் இரு ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தானிடம் தோற்றது. அடுத்து டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது.
கடந்த ஆட்டத்தில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் மோசமான தோல்வியை தழுவியது.





