பொழுதுபோக்கு

“பத்மபூஷன் விருது” அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘வேட்டையன்’ படத்தை முடித்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது அவரிடம், “நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வாழ்த்துகள்” என தெரிவித்து அங்கிருந்து கிளம்பினார் ரஜினி.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!