பொழுதுபோக்கு

பிரியா பவானி ஷங்கருக்கு டும் டும் டும்… முதல் முறையாக அவரே கூறிய தகவல்

நடிகை பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக திருமணம் எப்போது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் அர்ச்சனா பங்கேற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அர்ச்சனா திருமணம் எப்போது என பிரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்ப,

பண்ணனும் என கூறிய… கொஞ்சம் இழுத்தபடி, உண்மையில் திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் தான். வெட்டிங் பிளான் பண்ணனும், பர்ச்சஸ் போன்ற பல வேலைகள் இருக்கு. ஒரு வேலை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி இருந்தா இந்நேரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரியா பவானி ஷங்கர் எப்படியும் அடுத்தாண்டு திருமணம் செய்து கொள்ள பிளான் செய்துள்ளதாகவும் அதை முதல் முறையாக இப்போதுதான் நான் கூறுகிறேன் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனவே பிரியா பவானி ஷங்கருக்கு 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதலர் குறித்து அந்த பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் கூறுகையில், தன்னுடைய வாழ்க்கையில் ராஜ் கிடைத்ததற்கு நான் மிகவும் ஆசீர்வதிக்க பட்டிருக்க வேண்டும். அவர் இல்லை என்றால் நான் இப்போதும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி பெண்ணாக தான் இருந்திருப்பேன்.

அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளது. அதேபோல் தன்னிடம் கோபமாக இருக்கும் போது என் அம்மா சிலமுறை நீ மட்டும் அந்த பையன விட்டுட்டேன்னா நீ என் மூஞ்சிலேயே முழிக்காத. நான் அந்த பையன் கூட போயி அவங்க வீட்டிலேயே தங்கிடுவேன் என சொல்லுவாங்க என தெரிவித்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்