நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற கைதி – பொதுமக்களிடம் உதவி கோரல்
பிரித்தானியாவில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறை வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் லிவர்பூல் நகர மையத்தில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லிவர்பூலின் பிரின்சஸ் டிரைவைச் சேர்ந்த 22 வயதான ஸ்டீபன் க்ரிப் (Stephen Grzyb) என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவர் கொள்ளை வழக்கு ஒன்றுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
க்ரிப், குட்டையான கருமையான முடியுடன் வெள்ளை நிறத்தவர் என்றும், கடைசியாகப் பார்த்தபோது அடர் நீல நிற டி-ஷர்ட் மற்றும் அடர் நீல நிற கால்சட்டை அணிந்திருந்தார் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
க்ரிப்பைக் கண்டால் உடனடியாக 999 என்ற எண்ணை அழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




