வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உச்சக்கட்ட வெப்பநிலை
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நாளை (14) நண்பகல் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் (NDEWC) இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இதற்கமைய வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை’ மட்டத்தில் நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலை நிலவுவதைக் கருத்தில் […]



