ஜிம்பாப்வேயில் பயணிகள் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்
ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் மேலும் 27 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட எழுபதிற்கும் மேற்பட்டோர் தீவொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில் இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணிகள் […]






