எண்ணெய் விலை சரிவு!
ஈரான் போரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் பங்குச் சந்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.





