இன்றைய முக்கிய செய்திகள் செய்தி விளையாட்டு

Women’s T20 WC – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.

இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி