பங்களாதேஷை வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையிலான ODI போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் ODI போட்டி, 3 T20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் முதலாவது ODI போட்டி நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.
248 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று, தோல்வி அடைந்தது.
இதற்கமைய 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2-வது போட்டி நாளை மறுதினம் 20ஆம் திகதி நடைபெறுகிறது.





