நெதன்யாகு அமெரிக்காவிற்குள் நுழைந்தால் கைது செய்ய வேவண்டும் – மம்தானி வலியுறுத்து
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்குள் நுழைந்தால், “போர்க்குற்றங்களுக்காக” அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) வலியுறுத்தியுள்ளார்.
நெதன்யாகு “பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒரு கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி” என்றும் அவர் அழைத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட்டை அமல்படுத்துவதற்கான சுதந்திரமான சட்ட அதிகாரம் நியூயார்க் நகரத்திற்கு இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள மம்தானி அமெரிக்க மத்திய அரசு ICC-யில் இணைந்து அத்தகைய வாரண்ட்டை நிறைவேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“அமெரிக்காவில் இருக்கும்போது, நெதன்யாகு எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மம்தானியின் இந்த கோரிக்கை வந்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 2024-ல் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. இருப்பினும் நெதன்யாகு இந்தக் குற்றங்களை “யூத-விரோதமானது” என்று மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




