பெற்றோரை இழந்து தவிக்கும் 60,000 காசா குழந்தைகள்
இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்தது 60,737 குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளனர் . இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர்.
மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “சிவில் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும்” மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 2023 முதல் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து நடத்தி வரும் கொடிய தாக்குதல்களில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மட்டும் 1,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.




