ஆசியா

சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகள் விற்பனைக்கு..!

சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகளையும் எஞ்சிய வீடுகளையும் விற்பனைக்கு விட்டுள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இம்மாதம் இந்த வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது.

அவற்றில் 80 சதவீதத்திற்கு அதிகமான வீடுகளுக்குக் காத்திருக்கும் காலம் மூன்றரை ஆண்டுக்கும் குறைவாகும்

தேவைக்கேற்ப கட்டிக் விற்கப்படும் 7 வீட்டுத் திட்டங்களில் ஐந்தில் உள்ள வீடுகள் அவையாகும். மொத்தம் 4,000க்கும் அதிகமான வீடுகள் விற்கப்படுகின்றன.

பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், உட்லண்ட்ஸ் (Bedok, Queenstown, Choa Chu Kang, Hougang, Woodlands) வட்டாரங்களில் அவை அமைந்திருக்கும்.

பல்வேறு பேட்டைகளில் மேலும் 1,500க்கும் மேற்பட்ட எஞ்சிய வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

வீட்டு விலை கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்ய, அனைத்துப் புதிய வீடுகளுக்கும் கணிசமான விலைக் கழிவுகள் வழங்கப்படுகின்றன.

மறுவிற்பனை வீட்டு விலைகளைவிட அவை கணிசமான அளவு குறைவு என்று கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய தலைப்புகள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்