சம்பளத்தையும் தாண்டி படத்தின் லாபத்தில் பங்கு கேட்ட நயன்…
நடிகை நயன்தாரா – இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் ரெஜினா, யோகி பாபு, அபிநயா, கருடா ராம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆரம்பிக்கும் பொழுது ரூ. 55 கோடி பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டுள்ளது.







