இலங்கை செய்தி

மட்டக்களப்பில் மரண பீதியை ஏற்படுத்திய குரங்கு மடக்கிப்பிடிப்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த குரங்கு ஒன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த குரங்கு ஒன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகப் பலரைக் கடித்துக் காயப்படுத்திய பின்னர், பிடிபடாமல் மறைந்திருந்து வந்த குறித்த குரங்கு, இறுதியாகச் சின்ன உப்போடை பகுதியில் மேலும் மூவரைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய, அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய நிபுணர்கள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் குழுவினர், மட்டக்களப்பு அதிகாரிகளுடன் இணைந்து குரங்கைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த குரங்கு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குரங்கின் தொடர் தாக்குதல்களால் கடந்த ஒரு மாத காலமாக அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், குரங்கு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிம்மதியடைந்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை