இந்தியா செய்தி

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள்: 3 மாதங்களின் பின் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல்போன 213 இந்தியப் பிரஜைகளையும் உயிரிழந்தவர்களாகக் கருதி, உத்தியோகபூர்வமாக மரண அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு ஆரம்பித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல்போன 213 இந்தியப் பிரஜைகளையும் உயிரிழந்தவர்களாகக் கருதி, உத்தியோகபூர்வமாக மரண அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி திரிசூலி – போடேகோஷி ஆற்றுத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களில் 213 இந்தியப் பிரஜைகளும் அடங்குவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் தேசிய அனர்த்த இடர் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபை, காணாமல் போன 213 இந்தியர்களின் பெயர் விபரங்களைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது விபரங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதிக்கு முன்னர் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகள் மற்றும் திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நேபாள அரசு இறுதிப் பட்டியலைத் தயாரித்து, காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை நேபாள உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தூதரகம் முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த வெள்ள அனர்த்தத்தில் குறைந்தது 1,453 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கினால் வீடுகள், வாகனங்கள், வீதிகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் உற்பத்தித் திட்டங்களும் சேதமடைந்துள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி