ஆசியா

மலேசியாவில் பெண் ஒருவர் சேகரித்த பணத்தை அரித்த கறையான்

மலேசியாவில் பெண் ஒருவர் தமது தாயாரின் சேமிப்புப் பணத்தை கறையான் அரித்துள்ளது.

இதைக் காட்டும் காணொளியைச் சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

வெறும் 29 விநாடிகளுக்கு மட்டுமே நீடித்த அந்தக் காணொளி இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளது.

2 மாதங்களாகச் சேமித்த பணம் வீண்போனது. சம்பவம் குறித்து அவர் இன்னொரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

அதில் கறையான் 50 ரிங்கிட் நோட்டுகளை மட்டும் அரித்ததாகவும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை விட்டுவைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.

அவர் கிழிந்துபோன பண நோட்டுகளை வங்கியிடம் கொடுத்து புதுநோட்டுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார்.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

 

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்