வட அமெரிக்கா

சூடானில் இருந்து ராணுவ உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

U.S. President Joe Biden convenes the fourth virtual leader-level meeting of the Major Economies Forum (MEF) on Energy and Climate at the White House in Washington, U.S., April 20, 2023. REUTERS/Kevin Lamarque

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எங்களது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் என கூறியுள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், கார்ட்டூம் நகரில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எனது உத்தரவின் பேரில் இன்று, அமெரிக்க ராணுவத்தினர் சென்று பாதுகாப்பாக மீட்டு வந்தனர். சூடான் மக்களுடன் இணைந்து பணியாற்றி, தங்களது கடமைகளை துணிச்சல் மற்றும் தொழில்பக்தியுடன் மேற்கொண்ட நம்முடைய தூதரக பணியாளர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்து உள்ளார் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அவர்களை மீட்டு கொண்டு வந்த நம்முடைய ஈடு இணையற்ற திறமையான ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நமது முயற்சி வெற்றி பெறுவதில் உதவிய முக்கியம் வாய்ந்தவர்களான ஜிபவுட்டி, எத்தியோப்பியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

அமெரிக்கர்களை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் எங்களுடைய நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம். சூடானில் மீதமுள்ள அமெரிக்கர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பணிகளை பற்றி தனது குழுவினரிடம் இருந்து சீராக தகவல்கள் கிடைக்க பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்