நியூயார்கில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக தட்டம்மை நோய் பரவல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தட்டம்மை பாதிப்பால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நியூயார்க் மாநில சுகாதாரத் துறை, நேற்று இதனை அறிவித்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூயார்க் மாநிலத்தில் தட்டம்மையுடன் தொடர்புடைய மரணம் ஒன்று பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை கூறுகையில், “இந்தச் சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவும், தட்டம்மை பாதிப்பை எதிர்கொள்ளும் கவுண்டிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், லூயிஸ் கவுண்டியில் மக்கள் விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் தடுப்பூசி பணிகளுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.




