அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன.

சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

10 குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். சபாநாயகரிடம் குறித்த பிரேரணை நேற்று கையளிக்கப்பட்டது.

அதேவேளை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை.

வாக்கெடுப்பின்போது தத்தமது கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) ஆகியன இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை