செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகன் வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு: திரையரங்குகளுக்கு ஓடும் அமைச்சர்

ஜனநாயகன் வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு: திரையரங்குகளுக்கு ஓடும் அமைச்சர்

பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

திரைப்படம் எந்தவித தடங்கலுமின்றி வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் கோயிலில் முட்டிபோட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்ததுடன், மண்சோறு சாப்பிட்டும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதேவேளை, படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியப் பிரமுகர்கள், நிர்வாகிகள் பலரும் திரையரங்குகளுக்கு நேரடியாகச் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களைத் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருவதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி