இலங்கை

யாழில் நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content