உலகம்

கொரியப் போர் நினைவுநாள் – ஆயுத சோதனைகளில் பங்கேற்றார் கிம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று முக்கிய ஆயுதங்களின் சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார்.

1950-53 கொரியப் போர் தொடங்கியதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில்  மேம்படுத்தப்பட்ட 240-மிமீ, 24-குழல் பல்முனை ரொக்கெட் ஏவுதள அமைப்பு, தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 155-மிமீ சுய உந்து ஹோவிட்சர் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேம்படுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதளமானது, ஒரு தன்னியக்கத் துல்லிய வழிகாட்டு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது என்றும், அதன் ஏவும் தூரம் 90 கிலோமீட்டர் (56 மைல்கள்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முடிவில் கருத்து வெளியிட்ட கிம், பியோங்யாங் தனது ஆயுதத் திட்டங்களில் தானியக்கம், நீண்ட தூரத் திறன் மற்றும் “அதி துல்லியம்” ஆகியவற்றை விரிவுப்படுத்தி வருவதாக கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்