கொரியப் போர் நினைவுநாள் – ஆயுத சோதனைகளில் பங்கேற்றார் கிம்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று முக்கிய ஆயுதங்களின் சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். 1950-53 கொரியப் போர் தொடங்கியதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட 240-மிமீ, 24-குழல் பல்முனை ரொக்கெட் ஏவுதள அமைப்பு, தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 155-மிமீ சுய உந்து ஹோவிட்சர் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேம்படுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதளமானது, ஒரு தன்னியக்கத் துல்லிய வழிகாட்டு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது என்றும், அதன் ஏவும் தூரம் 90 கிலோமீட்டர் (56 […]




