பொழுதுபோக்கு

குபேரா படத்தில் நாகர்ஜூனா-வின் ஃபர்ஸ்ட் லுக் – மாஸ் வீடியோ வெளியானது…

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராயன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் நாகார்ஜூனா கேரக்டர் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் கட்டு கட்டாக பணம் காணப்படுகிறது. மழையில் குடை பிடித்தபடி நடந்து வரும் நாகார்ஜுனா, கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் காணப்படுகிறது. .

இதில் நாகார்ஜுனா கண்ணாடி போட்டுக்கொண்டு சிறப்பான லுக்கிங் காணப்படுகிறார். படத்தில் அவரது கேரக்டர் வில்லன் என்று கூறப்பட்டுள்ள சூழலில் பணக்கட்டுகளுடன் அவர் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்தப் படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் குபேரா படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content