மேற்குக் கரையில் இஸ்ரேல் அட்டகாசம் – அமெரிக்கா கண்டனம்
மேற்குக் கரையில் குடியேறியவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களைத் தடுப்பதற்கு இஸ்ரேல் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
‘வொஷிங்டன் போஸ்ட்’ இதழின் அமெரிக்க புகைப்பட ஊடகவியலாளர் ஹைடி லெவின் Heidi Levine மீது சிலர் தாக்குதல் நடத்தும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் காணும் காட்சிகள் மிகுந்த கவலையளிக்கின்றன. இத்தகைய செயல்களை கட்டுப்படுத்துமாறு நாங்கள் இஸ்ரேலியர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள் மற்றும் பிரெஞ்சு நகர மேயர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.




