எச்சரிக்கை விடுத்த ட்ரம்புக்கு ஈரான் வழங்கிய நெருப்பு பதிலடி
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பதில் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹமீத் போவர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் எரிசக்தி நிலையங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு, “சரியான நேரத்தில் துல்லியமானதும் பொருத்தமானதுமான பதிலடி நடவடிக்கைகள்” மூலம் தெஹ்ரான் பதிலளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இராணுவ மோதல்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சர்வதேச சமூகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய மோதல்களின் விளைவுகளை எதிர்காலத் தலைமுறையினரே சுமக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணுவாயுதத்தைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய பிகாக்ஸ் மவுண்டன் (Pickaxe Mountain) தளத்தை அமெரிக்கா இலக்கு வைக்க வேண்டியிருக்கலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.




