உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஒக்டோபர் 7 தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை; நெதன்யாகுவுக்குநாடாளுமன்றில் பின்னடைவு

இஸ்ரேலில் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கான சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஆரம்பகட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பில் குறித்த சட்டமூலம் புதன்கிழமை (25) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 65 உறுப்பினர்களும் எதிராக 50 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான பாதுகாப்புத் தோல்வியாகக் கருதப்படும் குறித்த தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்காக அரச ஆணைக்குழுவொன்றை அமைப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும்.

எனினும், சுயாதீன விசாரணைக்குப் பதிலாக, விசாரணைக் குழு உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், விசாரணையின் வரம்பை அமைச்சரவையும் தீர்மானிக்கும் வகையிலான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலான விசாரணையொன்றையே நெதன்யாகு வலியுறுத்தி வருகின்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், விசாரணையின் ஊடாக உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், பிரதமர் பதவிக்கால வரம்புகளை அறிமுகப்படுத்துவதற்கும், குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் நபர்கள் பிரதமர் பதவியில் நீடிப்பதற்குத் தடைவிதிப்பதற்குமான மேலும் சில சட்டமூலங்களுக்கும் நாடாளுமன்றம் ஆரம்பகட்ட ஆதரவை வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தம்மை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான முயற்சி என நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு மேலும் மூன்று வாக்கெடுப்புகளில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி