ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.





