உலகம்

விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் – ட்ரம்ப் மிரட்டல்

ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதற்கமைய, ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது இறந்த சடலங்களை படிப்படியாக இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது. பதிலாக இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது.

ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இறந்த உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கூடுதல் நேரம் வேண்டும் என்றும் ஹமாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களால் முடிந்தவரை அனைத்து உடல்களையும் ஒப்படைத்துவிட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என ட்ரம்ப் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில் “நான் ஒரு வார்த்தை கூறினால் இப்போது இஸ்ரேல், காஸாவின் வீதிகளுக்கு திரும்பும். இஸ்ரேல் இராணுவத்தினர், காஸா உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஹமாஸில் என்ன நடக்கிறதோ அது விரைவில் சரி செய்யப்படும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்