பொழுதுபோக்கு

சகுனியாக நடிக்க வேண்டியவர் ராமனாக நடிப்பதா? : சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமல்ல  பாலிவுட்டில் உள்ள பிரபலங்களின் மீது வெளிப்படையாகவே பல குற்றச்சாட்டுகளை அடுக்கி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இப்போது பிரபல பாலிவுட் நடிகரை மறைமுகமாக கடுமையாக சாடி உள்ளார். காந்தியவாதி போல் பேசும் கங்கனா ரன்வீர் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார்.

அதாவது ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக ஆலியா பட் நடிக்கவிருக்கிறார். இது குறித்து கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது சினிமாவில் உள்ளவர்களைப் பற்றி மோசமாக பேசியே பிரபலமாகிய ஒருவர் மது,  மாது என எந்நேரமும் இருக்கக்கூடியவர். இப்படி போதைக்கு அடிமையான ஒருவர்  ராமராக நடிக்க கூடாது என கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய குணம் மிகவும் மோசமானது என்பதால் துரியோதனன் சகுனி போன்ற கதாபாத்திரங்களில் தான் அவர் நடிக்க வேண்டும் என்றும்  விமர்சித்திருக்கிறார்.

இப்போது கங்கனாவின் இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது

VD

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்