இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோய் தொற்று
20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி HIV தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டோரில் 88 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
இது தொடர்பில் கருத்து வெளிட்டுள்ள தேசிய பாலியல் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மாதவி குணரத்ன, “இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு தற்போது முடிவடைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டின் முடிவில், 708 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 1987-ல் முதல் எச்.ஐ.வி நோயாளி பதிவான காலத்திலிருந்து, நாங்கள் ஆண்டுதோறும் புதிய நோயாளிகளைக் கண்டறிந்து வருகிறோம்.
2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில், 8,111 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் மூன்று காலாண்டுகளை எடுத்துக் கொண்டால், தற்போது 15-24 வயதுக்குட்பட்டோரில் 88 நோயாளிகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.


