பொழுதுபோக்கு

தனுஷின் “ராயன்” தள்ளிப்போக கமல்தான் காரணமா?

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் உருவாகியுள்ள சூழலில் தன்னுடைய வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் மே மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ள சூழலில் அந்த படம் தொடர்ந்து மூன்று வாரங்களாவது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் ப்ரொமோஷன்கள் ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து ட்ரெய்லர், இசை வெளியீடு போன்றவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content