இலங்கைக்கு 15 மைல் தொலைவில் சிக்கியுள்ள ஈரானின் எண்ணெய் கப்பல்கள்
சுமார் 20 ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல்கள், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய கச்சா எண்ணெயை சீனாவுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. […]





