ஈரானால் இனி முடியாது: ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது என்கிறார் ட்ரம்ப்!!
அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் அதிக விருப்பம் கொண்டுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“போர்நிறுத்தத்தை மீறுவதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களா?” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரான் பாதுகாப்புப் படைகளின் திறன்களை கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன. ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது. விமானப்படை அழிந்துவிட்டது.
அதேபோல ஆளில்லா விமான தொழிற்சாலைகளின் செயல்பாடு சுமார் 82 சதவீதம் குறைந்துவிட்டது.
ஏவுகணை உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தொழிற்சாலைகள் ஏறக்குறைய 90 சதவீதம் முடங்கிவிட்டன. ஈரானின் அணுசக்தித் முற்றிலுமாக அழித்துவிட்டோம்.
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டதன் காரணமாக, ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
எண்ணெய் விற்பனை மூலம் அந்நாட்டுக்கு வருமானமும் கிடைப்பதில்லை. இந்தச் சிக்கலுக்கு மிக விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் தீவிரமாக விரும்புகிறது. “ – என்றார் ட்ரம்ப்




