உலகம்

ஈரானில் முடிவுக்கு வருகிறது இணைய முடக்கம்!! கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!

பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் இணைய முடக்கத்தை அறிவித்திருந்தது.

இந்த முடக்கம் கடந்த 03 மாதங்களாக அமுலில் உள்ள நிலையில் அதனை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இணைய முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர  நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இருப்பினும், நெட்பிளாக்ஸ் (NetBlocks) போன்ற சுயாதீன கண்காணிப்பு அமைப்புகள், நாடு முழுவதும் இணைய இணைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

தடைகள் நீக்கப்பட்டாலும், இணையக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஈரானிய ஆட்சியை சீர்குலைப்பதாகக் கருதப்படும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சேவைகளை குடிமக்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்