உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (15) அதிகாலை கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 36 பேர் பலத்த காயங்களுடனும், 77 பேர் சிறு காயங்களுடனும் மீட்கப்பட்டனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து 341 பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுமார் 1,300 வீடுகள் சேதமடைந்துள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்