இலங்கை

புதிய உச்சம் – டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,011  ஆக உயர்ந்துள்ள அதேநேரம் மரணங்களின் எண்ணிக்கை 68  ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அறிவிப்பின்படி, மேற்கு மாகாணத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 48,725 தொற்றாளர்களத் மேற்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சதவீத்தின்படி, 52.96 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெற்கு மாகாணத்தில் 13,533 நோய்த்தொற்றுகளுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,274 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,558 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் 19,631 டெங்கு நோய்த்தொற்றுகளுடன் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கொழும்பில் 18,245 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கண்டியில் 6,613, மாத்தறையில் 6,036, களுத்துறை 5,951, காலியில் 5,039 மற்றும் இரத்தினபுரவில் 4,935 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்