இந்தோனேசிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (15) அதிகாலை கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 36 பேர் பலத்த காயங்களுடனும், 77 பேர் சிறு காயங்களுடனும் மீட்கப்பட்டனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து 341 பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போனவர்களின் சரியான […]



