ஆசியா

இந்தோனேசியா – இந்தியா சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியாவும் இந்தோனீசியாவும் பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டு உள்ளன.கலாசாரம், சுகாதாரம், கடல்துறை, பாதுகாப்பு மற்றும் மின்னிலக்கத் துறைகள் தொடர்பான உடன்பாடுகள் அவை.

இந்தியக் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அந்த உடன்பாடுகளை இருநாடுகளும் செய்துகொண்டன.

கையெழுத்திடும் நிகழ்வை இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பார்வையிட்டனர்.

கையெழுத்து நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் பிரபோவோ, இந்தியாவுடனான பொருளியல் பங்காளித்துவத்தை தமது அரசாங்கம் வேகப்படுத்தும் என்றும் நீண்டகால ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

“பொதுமக்களின் நலன் தொடர்பான முக்கிய துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவுடனான எங்களது ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறுவதற்கான நடைமுறை வாயிலாக இந்தோனீசியாவுக்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பிரபோவோ நன்றி தெரிவித்தார்.வளர்ந்து வரும் சந்தைப் பொருளியல் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், உலகின் நிலைத்தன்மைக்கும் வட்டார ஒத்துழைப்புக்கும் பலனளிக்கும் என்றார் அவர்.

முன்னதாகப் பேசிய பிரதமர் மோடி, தற்காப்பு சாதன உற்பத்தி, விநியோகத் தொடர் மேம்பாடு ஆகிய அம்சங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றார்.

“இணையப் பாதுகாப்பு, கடல்துறைப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாதச் சிந்தனை ஒழிப்பு போன்ற விவகாரங்களில் ஒத்துழைக்கவும் முடிவு செய்துள்ளோம்,” என்றார் மோடி.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்